மடற்குழுக்கள்

இந்த பக்கத்தில் தமிழ்-ஓப்பன்ஆபீஸ் திட்டத்திற்காக இயங்கும் மடற்குழுக்களை பற்றிய தகவல்களை காணலாம்.

எவ்வாறு இது இயங்குகிறது?

நீங்கள் இந்த மடற்குழுவின் முகவரிக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பினால் அது அந்த குழுவில் சேர்ந்திருக்கும் அனைவருக்கும் சென்று சேரும். அதே சமயம் நீங்கள் குழுவில் சேர்ந்திருக்கவேண்டும் அப்போதுதான் மற்ற உறுப்பினர் எழுதும் பதில் மடல்களைப் படிக்க முடியும். கீழேயுள்ள பெட்டியில் உள்ள சுட்டிகளைப் பயன்படுத்தி நீங்கள் குழுவில் சேர்ந்துகொள்ள முடியும்.

எதற்காக இந்த மடற்குழு?

  • "discuss@ta.openoffice.org" என்ற இந்த மடற்குழுவில் தமிழ்-ஒப்பன்ஆபீஸ் மொழித்திட்டம் பற்றியும் OpenOffice.org பற்றிய தமிழர்களுக்கு பயனுள்ளத் தகவல்களையும் விவாதிக்கலாம்.
  • இந்த மடற்குழுவை ஓப்பன் ஆபீஸ் உபயோகம் பற்றி கேள்விகள் கேட்கவும், அதற்கான பதில்கள் கொடுக்கவும் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்களிடம் சிறந்த துனுக்கு இருந்தால் கூட அவற்றை மடற்குழுவிற்கு அனுப்புங்கள்! அவற்றை நாங்கள் ஓப்பன் ஆபீஸ் உபயோகம் பற்றிய துணுக்குகள் பகுதியில் சேர்த்துவிடுகிறோம்.
  • பொதுவான (அதாவது தமிழ் மொழி சாராத) தலைப்புகளுக்கு, நாங்கள் ஆங்கில மொழியில் இயங்கும் users@openoffice.apache.org மற்றும் users@openoffice.apache.org குழுக்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம். இதுபோன்ற மற்ற ஆங்கில மடற்குழுக்களுக்கு , இடதுபக்கம் உள்ள பெட்டியில் உள்ள "Mailing lists" என்ற சுட்டியைத் தட்டவும்.

தமிழ் மொழித்திட்ட மடற்குழுக்கள்
குழு குழுவில் சேர குழுவில் இருந்து விலக சேமிக்கப் பட்டுள்ள மடல்களில் தேடு சேமித்த மடல்களைப் பார்

discuss@ta.openoffice.org
ஓப்பன் ஆபீஸ் பற்றியும் அதன் துணைத்திட்டமாகிய, தமிழ் மொழித்திட்டம் பற்றியும் விவாதிக்கலாம்.

வழக்கமான வழக்கமான தேடு உலாவு


மடற்குழுக்கள் பயன்பாடுபற்றி மேலும் சிலத் தகவல்கள்

மடலை ஒருகுழுவிற்கு அனுப்பும் முன் தயவுசெய்து அக்குழுவில் சேர்ந்துவிடவும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட தொடர்பில்லாத கேள்விகளை தனித் தனி மடல்களில் அனுப்பவும். தெளிவாக மடலின் பொருளை குறிப்பிடவும்

இந்த மடற்குழு மட்டுறுத்தபடாதது. இக்குழுவில் சேர்ந்துள்ள அனைவரது மடல்களும் குழுவில் இருக்கும் அனைவருக்கும், மட்டுறுத்துனரால் வடிகட்டப்படாமல், சென்று சேரும். ஆகையால் குழுவிற்கு மடல் அனுப்புவதில் சில ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதிகளை(Netiquette) கடைபிடிக்கவேண்டுகிறோம்.

மடல் வடிகட்டிக்களை அமைப்பது மூலம் பல மடற்குழுவிலிருந்து வரும் மடல்களில் முக்கியமானதை தனியாக சேமிக்கமுடியும். பெரும்பாலான மின்னஞ்சல் செயலிகள் மடல் வடிக்கட்டி வசதியைக் கொண்டுள்ளன.

தமிழ்-ஓப்பன்ஆபீஸ் குழுவினர்



 

 

 
தமிழ்-ஓப்பன்ஆபீஸ்
அறிமுகம்
மென்பொருள்
விளக்கம்
பதிவிறக்கங்கள்
குறுந்தட்டில் மென்பொருள்
சொல்திருத்தி
திட்டம்
பின்புலம்
FAQ
உதவி  பெறுவது
மடற்குழுக்கள்
ஆவணங்கள்
பங்களித்தல்
எப்படி பங்களிப்பது?
பிழைகளை தெரியப்படுத்துவது
தொடர்புக்கு
மடற்குழுக்கள்
முகவரிகள்
மற்றவை
நன்றிக்குரியவர்கள்
உரிமம்