பின்புலம்

இந்தப்பக்கத்தில் ஓப்பன் ஆபீஸ் திட்டத்தினைப் பற்றி மேலும் சில விளக்கங்கள் கொடுக்கிறோம்.

வரலாறு

OpenOffice.org யின் வேர்கள், ஸடார்ஆபீஸ்(StarOffice) என்னும் அலுவலகத் மென்பொருள் தொகுப்பில் இருந்து ஆரம்பிக்கிறது. ஸ்டார் ஆபீஸ் 1980களின் நடுப்பகுதில், ஜெர்மனி நாட்டில் தயாரிக்கப்பட்டது. அதன் உரிமத்தை 999ஆம் ஆண்டு சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனம் வாங்கியது. ஸ்டார் ஆபீஸ் பதிப்பு 5.2 ஜுன் 2000 இல் வெளியிடப்பட்டது. பதிப்பு 6.0 மே 2002 இல் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டார்ஆபீஸ் 6.0 உருவாக்கத்தில் வழக்கத்திற்கு மாறான விசயம் என்னவென்றால், இது ஒரு திறவூற்று செயலி திட்டமாக ஒப்பன்ஆபீஸ் என்ற உருவெடுத்துக்கொண்டிருந்ததுதான். இதனை செயல்படுத்த , சன் மைக்ரோ சிஸடம்ஸ் நிறுவனம், ஸ்டார் ஆபீஸ் மூலநிரல்களை (மற்றவர்கள் உருவாக்கிய கூறுகளின் மூல நிரலைத்தவிர), திறவூற்று உரிமத்தின் கீழ் OpenOffice.org திட்டத்தினை உருவாக்கி வெளியிட்டது. இதன் மூலம் சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனம் அனைத்து மென்பொருள் உருவாக்கத்தையும் பகுதிநேர திறவூற்று ஆர்வலர்களிடம் விட்டுவிட்டது என்று கூற முடியாது. இன்னமும் பலவிதமான ஓப்பன் ஆபீஸ் உருவாக்க வேலைகள் சன் சம்பளத்துக்கு அமர்த்திய நிரலாளர்களால் நடத்தப்படுகிறதி. மேலும் OpenOffice.org திட்டத்தின் நடப்பு செலவுகளை சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் தான் ஏற்றுக் கொள்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்டார்ஆபீஸ் மற்றும் ஓப்பன்ஆபீஸ்

இப்போது ஓப்பன்ஆபீஸ் திட்டத்தின் மூலநிரல்களைக் கொண்டு இரண்டு மென்பொருட்கள் தயாரிக்கப்படுகிறது என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்: ஸ்டார்ஆபீஸ் - இதில் திறவூற்று செயலி அல்லாத கூறுகளும் சேர்க்கப்பட்டிருக்கும், மற்றும் இதன் சகோதர மென்பொருள் ஓப்பன்ஆபீஸ் - இதில் கிட்டதட்ட அனைத்து கூறுகளும் திறவூற்று கூறுகளை வைத்தே ஆக்கப்பட்டிருக்கும்.

ஆங்கில மொழியில் இந்த இரு மென்பொருட்களுக்கிடையில் உள்ள வித்தியாசங்கள் இங்கே விளக்கப்பட்டிருக்கிறது.

நடைமுறையில் இரண்டும் உள்ள வித்தியாசங்கள்:

  • ஸ்டார்ஆபீஸ் 6.0 இலவசம் கிடையாது, இதன் உரிமம் விலை சுமார் 100 €. ஓப்பன்ஆபீஸ் முற்றிலும் இலவசம்.
  • ஸ்டார்ஆபீஸ் 6.0 அதிகம் முழுமைப் பெற்றது என்று கூறலாம் (அதாவது சில அதிகமான எழுத்துருக்கள், ஆங்கிலம், ஜெர்மன், பிரன்சு, ஸ்பானிய சொல்திருத்திகள் மற்றும் அகராதிகள், அடாபேஸ் என்ற தரவுத்தளம், படிம அச்சுகள், கிளிப் ஆர்ட்கள், சில கோப்பு வடிகட்டிகள் போன்றவை இதனுடன் உள்ளது). சொல்திருத்திக்கு ஓப்பன்ஆபீஸ் தொகுப்பில், வேறு மாற்று செயலி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
  • ஸ்டார்ஆபீஸ் தொகுப்பிற்கு , சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் முழுமையான வாடிக்கையாளர் ஆதரவை அளிக்கிறது (இது நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்). ஆனால் ஓப்பன்ஆபிஸ் செயலிக்கு , பயனர்கள் தங்களுக்குள்ளாக பயனர் ஆதரவை பெற்றுக்கொள்ளவேண்டும் (இத் தளத்திலுள்ள மடற்குழுக்கள் பகுதியை பார்வையிடவும்)
  • ஸ்டார்ஆபீஸ் 6.0 இல் தமிழ் மொழி ஆதரவு வழங்கப்படும் சாத்தியக்கூறுகள் இப்போது இல்லை. ஆனால் ஓப்பன்ஆபீஸ் தொகுப்பு தமிழ் உட்பட பல மொழிகளில் கிடைக்கிறது. மேலும் சொல்திருத்தியும் பல மொழிகளில் கிடைக்கிறது.

தமிழ்-ஓப்பன்ஆபீஸ் குழுவினர்



 

 

 
தமிழ்-ஓப்பன்ஆபீஸ்
அறிமுகம்
மென்பொருள்
விளக்கம்
பதிவிறக்கங்கள்
குறுந்தட்டில் மென்பொருள்
சொல்திருத்தி
திட்டம்
பின்புலம்
FAQ
உதவி  பெறுவது
மடற்குழுக்கள்
ஆவணங்கள்
பங்களித்தல்
எப்படி பங்களிப்பது?
பிழைகளை தெரியப்படுத்துவது
தொடர்புக்கு
மடற்குழுக்கள்
முகவரிகள்
மற்றவை
நன்றிக்குரியவர்கள்
உரிமம்