OpenOffice.org மென்பொருள்

அனைவருக்கும் இலவசமாக/சுதந்திரமாக கிடைக்க கூடிய ஒரு அலுவலக மென்பொருள்தொகுப்ப OpenOffice.org.

கீழேயுள்ள கூறுகளை இது உள்ளடக்கியுள்ளது:

  • சொல்(சொற்செயலி மற்றும் ஹெச்டிஎம்எல் தொகுப்பி).
  • விரிதாள்.
  • வரைவியல் செயலி(வெக்டார் வரைவியலுக்கான வரையும் செயலி)
  • வழங்கல் செயலி.
  • சூத்திரம்-தொகுப்பி.
  • தரவுத்தளம் (இது தொடக்கநிலையில் இருக்கிறது).

செயல்பாட்டிலும் , வசதிகளையும் பொருத்து , OpenOffice.org வேறு எம்.எஸ் ஒஃபீஸ் போன்ற புகழ்பெற்ற அலுவலகமென்பொருள் (இலவசமல்லாத) தொகுப்புகளுக்கு நிகரானதே.

இதைபற்றி மேலும் விபரம் பெற இந்த சுட்டியைத் தட்டவும்.

நீங்கள் எந்தப்பிரச்சனையும் இல்லாமல் மைக்ரோசாஃட் ஆபீஸ் ஆவணங்களை (Word, Excel, Powerpoint) ஓப்பன் ஆபீஸில் திறந்து, எடிட் செய்து , மீண்டும் அதன் அசல் படிவத்திலோ அல்லது ஓப்பன் ஆபீஸ் படிவமாகவோ சேமிக்கலாம்.
மைக்ரோசாஃப்ட் ஆவணங்களின் படிவம் பற்றி அதிகாரப்பூர்வ விளக்கம் இல்லாத நிலையிலும்(மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அவற்றை வெளியிடுவதில்லை), இந்த அளவுக்கு செயல்படவைத்ததே ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். நீங்கள் எதாவது ஒரு மைக்ரோசாஃப்ட் ஆவணம் சரியாக ஓப்பன் ஆபீஸில் திறக்கவில்லை என்று அறிந்தீர்களானால், உடனே எங்கள் நிரலாளர்களுக்கு அதற்கான பிழைகள் வலைத்தளத்தில் பதிவுசெய்து தெரியபடுத்துங்கள். தொகுப்பை மேலும் நெறிபடுத்த இது உதவும்.

தமிழ்-ஓப்பன்ஆபீஸ் குழுவினர்



 

 

 
தமிழ்-ஓப்பன்ஆபீஸ்
அறிமுகம்
மென்பொருள்
விளக்கம்
பதிவிறக்கங்கள்
குறுந்தட்டில் மென்பொருள்
சொல்திருத்தி
திட்டம்
பின்புலம்
FAQ
உதவி  பெறுவது
மடற்குழுக்கள்
ஆவணங்கள்
பங்களித்தல்
எப்படி பங்களிப்பது?
பிழைகளை தெரியப்படுத்துவது
தொடர்புக்கு
மடற்குழுக்கள்
முகவரிகள்
மற்றவை
நன்றிக்குரியவர்கள்
உரிமம்